கல்யாணம் மற்றும்
பிற சுபநிகழ்ச்சிகளில், எல்லாரும் இணைந்து உண்பதை “பந்தி” என்கிறார்கள். பந்தி என்பதற்கு
வரிசை என்று ஒரு பொருள் இருக்கிறது. பந்தி பரிமாறுதல் என்பது ஒரு கலை.
எதோ இலையை போட்டோம் உணவுப் பதார்த்தங்களை பரிமாறினோம் என்பதில்லை பந்தியில்
பரிமாறுதல் என்பது. சாப்பிடுவோர் மனம்
அறிந்து பரிமாறுதல் அவசியம். வந்த விருந்தினர்களை நாம் முறையாக வரவேற்று விருந்தளிக்க
வேண்டும். அவர்களது மனம்நிறைய வயிறுநிறையச் சாப்பிட்டுச் செய்ய வேண்டும்.
இதற்கு பந்தி என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? சமஸ்கிருதத்தில் "பங்க்தி'
என்பது தமிழில் "பந்தி' ஆனது. “பங்க்தி” என்றால் “சேர்ந்து உண்ணுதல்” என்பது பொருள்.
மனத்தூய்மையான ஒருவர், பந்தியில் அமர்ந்து சாப்பிட்டால் அங்கு பரிமாறும் உணவெல்லாம்
சுத்தமாகி விடும் என்பது ஐதீகம்.
Kalyanaveedu.com
Kalyanaveedu.com

No comments:
Post a Comment