Wednesday, 29 October 2014

திருமண முகூர்த்த நேரம் தவறி விட்டதா? இனி கவலையை விடுங்க


நம்முடைய வாழ்க்கையில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளுக்கு சிறந்த நாட்களைத் தேர்ந்தெடுக்க நமது முன்னோர்கள் சில அறிவுரைகளை கொடுத்துள்ளனர். அப்படி கூறப்பட்ட சில விதிமுறைகளை பின்பற்றி நாம் தேர்ந்தெடுப்பதற்குப் பெயர்தான் முகூர்த்தம்.

     திருமணம், கிரகப்பிரவேசம், காதணிவிழா, போன்ற மங்கல நிகழ்ச்சிகளில் முகூர்த்த நேரம் குறித்து அந்த நேரத்தில் தான் நடத்துவது வழக்கம். ஆனால் தவிர்க்க முடியாத சில நேரங்களில் முகூர்த்த நேரம் தவறிப்போவதும் உண்டு. உதாரணத்திற்கு காலை 7.30 மணியிலிருந்து 8.30 மணிவரை திருமணத்திற்கு நல்ல நேரம் குறித்திருப்பார்கள். ஆனால் மணப்பெண்ணோ, மண மகனோ அந்த நேரத்தில் திருமண மேடைக்கு வரமுடியாமல் போய்விடும். முகூர்த்த நேரம் முடிந்து விடும். இதனால் பலரும் குழம்பி, மன நிம்மதி இல்லாமல் தவிப்பார்கள். இதற்கு என்ன செய்வது

     நமது சாஸ்திரத்தில் இதற்கு வழி உள்ளது. அதே திருமண முகூர்த்த நாளில், நண்பகல் 11 மணி 59 நிமிடம், 59 விநாடி முடிந்து மிகச்சரியாக 12 மணிக்கு தாலிகட்டி கொள்ளலாம் என சாஸ்திரங்கள் கூறுகிறது. இதன்படி சிலர் முகூர்த்த நேரத்தை தவற விட்டு நண்பகல் 12 மணிக்கு தாலி கட்டிக்கொண்டு மிகச்சிறப்பாக வாழ்கின்றனர். இந்த நண்பகல் 12 மணி முகூர்த்தத்தை "அபிஜித் முகூர்த்தம் என ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர். இனிமேல் முகூர்த்த நேரத்தை தவற விடுபவர்கள் இந்த அபிஜித் முகூர்த்த நேரத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

kalyanaveedu.com

No comments:

Post a Comment